‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்திற்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு!

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம்…

கலைஞரின் கனவு இல்லம் திட்டத்திற்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த பிப்ரவரி 19ம் தேதி தமிழ்நாடு சட்டபேரவையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டம் தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாட்டில் குடிசை வீடுகளில் குடியிருப்போருக்கு, புதிதாக ஆர்.சி.சி.கூரையுடன் கூடிய வீடுகளை கட்டித் தருவதே இத்திட்டத்தின் நோக்கமாக அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை தொடர்ந்து, கடந்த மார்ச் மாதம் ஊரக வளர்ச்சித்துறை இதற்கான அரசாணையை வெளியிட்டது. அதில், பயனாளிகளுக்கான தகுதிகள் உள்ளிட்ட விவரங்கள் வெளியாகின.இத்திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான வழிகாட்டுதல்களை ஊரக வளர்ச்சித்துறை இயக்குனர் பி.பொன்னையா வெளியிட்டு, பல்வேறு அறிவுறுத்தல்களை மாவட்ட ஆட்சியர்களுக்கு வழங்கியுள்ளார்.

இதையும் படியுங்கள் : பள்ளி மாணவர்களுக்கு முக்கிய தலைவர்கள் பிறந்தநாளில் இனிப்பு பொங்கல் – தமிழ்நாடு அரசு உத்தரவு!

இந்நிலையில், கலைஞரின் கனவு இல்லம் திட்டத்துக்கு ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஒரு லட்சம் வீடுகளை கட்ட இந்த ரூ.3,100 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.பயனாளிகளை தேர்வு செய்யும் பணியை ஜூன் 25-ம் தேதிக்குள் முடித்து ஜூலை 5-ம் தேதி பணிகளை தொடங்குவதற்கான ஆணை வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மேலும், ஜூலை 10ஆம் தேதிக்குள் வீடு கட்டுவதற்கான பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. குறிப்பாக, ஊரகப் பகுதிகளில் 5,000 குறைவாக குடிசைகள் உள்ள 15 மாவட்டங்களுக்கு முன்னுரிமை அளித்து வீடு கட்டும் ஆணைகளை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.