Ranipet | காலணி உற்பத்தி ஆலைக்கு அடிக்கல் நாட்டினார் முதலமைச்சர் #MKStalin!

ராணிப்பேட்டையில் அமைய உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. தைவான்…

#Ranipet | Chief Minister #MKStalin laid foundation stone for shoe manufacturing plant!

ராணிப்பேட்டையில் அமைய உள்ள காலணி தொழிற்சாலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சிப்காட் பனப்பாக்கம் தொழிற்பூங்காவில் ரூ.1,500 கோடி மதிப்பீட்டில் காலணி உற்பத்தி ஆலை அமைக்கப்பட உள்ளது. தைவான் நாட்டைச் சேர்ந்த ஹோங்ஃபு நிறுவனம் இந்த ஆலையை அமைக்கிறது. இந்நிலையில் இந்த காலணி உற்பத்தி ஆலை அமைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார். இந்த உற்பத்தி ஆலை மூலம் சுமார் 25,000 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படியுங்கள் : #GoldRate | இன்று தங்கம் வாங்கலாமா… இன்றைய விலை நிலவரம் என்ன?

குறிப்பாக கிராமப் புறங்களில் உள்ள உள்ள 75 சதவீத பெண்களுக்கு இங்கு வேலை வழங்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அடிக்கல் நாட்டும் நிகழ்வின் போது முதலமைச்சருடன், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் காந்தி, டி.ஆ.பி. ராஜா மற்றும் ஹோங்ஃபு நிறுவனத்தில் உயர் அதிகாரிகள் கலந்துக்கொண்டனர். மிகப்பெரிய அளவில் அமையவுள்ள இந்த தொழிற்சாலையில் விளையாட்டு வீரர்களுக்கான காலணிகள் மற்றும் லெதர் அல்லாத காலணிகள் தயாரிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.