25.5 C
Chennai
September 24, 2023
முக்கியச் செய்திகள் சினிமா

முழு படமாக உருவாகவுள்ளது ரோலக்ஸ்? -லோகேஷ் கனகராஜின் அடுத்த திட்டம் இதுதானா…

விக்ரம் படத்தில் ரோலக்ஸ் என்ற கேமியோ கேரக்டரில் சூர்யா நடித்திருந்த நிலையில், அதனை முழு படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவு செய்திருந்ததை ரசிகர்கள் கொண்டாடி வந்தனர்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இதில் விஜய் சேதுபதி, பகத் ஃபாசில், சூர்யா உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.  ராஜ்கமல் ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்க ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிட்ட விக்ரம் திரைப்படம் கடந்த ஆண்டு(2022) மிகப் பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமாக ரசிகர்களால் கொண்டாடப்பட்டது.

இப்படத்தில் ரோலக்ஸ் என்ற கதாப்பாத்திரத்தில் சூர்யா நடித்திருந்தது பெரும் வரவேற்பை பெற்றது.  ஒரு புதிய சூர்யாவை பார்த்த ரசிகர்கள் அவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள். 

இந்நிலையில்,  ரோலக்ஸ் கேரக்டரை சூர்யா  முழு படமாக எடுக்க லோகேஷ் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விக்ரம் திரைப்படம் வெளியாகி ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி ரோலக்ஸின் புகைப்படம் ஒன்று சமூகவலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:

Share to KooShare to WhatsappShare to PinterestShare to TelegramShare to Print

Related posts

பறந்துக் கொண்டிருந்த விமானம் மீது விழுந்த ஐஸ்கட்டி!

G SaravanaKumar

அதிக கட்டணம் வசூலித்த ஆம்னி பேருந்துகள் மீது நடவடிக்கை: அமைச்சர்

EZHILARASAN D

உங்கள் ஸ்மார்ட்போனை பராமரிப்பது இவ்வளவு சுலபமா? இது தெரியாமல் போச்சே!

Arivazhagan Chinnasamy