நடிகை தமன்னா, ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து ரொமான்ஸ் காமெடி படத்தில் நடிக்கிறார்.
நடிகை தமன்னா, கேடி படம் மூலம் தமிழில் அறிமுகமானார். தொடர்ந்து கல்லூரி, கண்டேன் காதலை, வீரம், பாகுபலி உட்பட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தமிழ் தவிர தெலுங்கு, இந்தி படங்களிலும் நடித்து வருகிறார். தமிழில் கடைசியாக விஷாலில் ’ஆக்ஷன்’ படத்தில் நடித்திருந்தார். தெலுங்கில் அவர் நடித்துள்ள சில படங்கள் ரிலீஸ் ஆக உள்ளன.
இந்நிலையில், இந்தியில் நடிகை ஜெனிலியாவின் கணவர் ரிதேஷ் தேஷ்முக்குடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். சஷாங்கா கோஷ் இயக்கும் இந்த காமெடி ரொமான்ஸ் படத்தில் பூனம் தில்லான், குஷா கபிலா ஆகியோரும் நடிக்கின்றனர்.
நெட்பிளிக்ஸுக்காக உருவாகும் இந்தப் படத்துக்கு, ’பிளான் ஏ பிளான் பி’என்று பெயரிடப்பட்டுள்ளது. இது வழக்கமான கதையாக இருக்காது. ஒவ்வொரு கேரக்டரும் புதிதாகவே இருக்கும். நெட்பிளிக்ஸுக்காக இதை உருவாக்குவதில் மகிழ்கிறேன் என்று தெரிவித்துள்ளார் இயக்குநர் சஷாங்கா கோஷ்.









