RIP | பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் காலமானார்!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் உடல்நலக்குறைவால் காலமானார். இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று…

RIP | Famous tabla musician Zakir Hussain passes away!

பிரபல தபேலா இசைக் கலைஞர் ஜாகிர் ஹுசைன் உடல்நலக்குறைவால் காலமானார்.

இந்தியாவை சேர்ந்த பிரபல தபேலா இசைக்கலைஞர் ஜாகிர் உசைன். மும்பையை சேர்ந்த இவர் பல்வேறு திரைப்படங்களில் தபேலா இசை அமைத்துள்ளார். மேலும், இசைகச்சேரிகளிலும் பங்கேற்று பிரபலமடைந்துள்ளார். உலகப்புகழ் பெற்ற ஜாகிர் உசைன் 4 முறை கிராமி விருதுகளை வென்றுள்ளார். இவருக்கு மத்திய அரசு பத்மஸ்ரீ, பத்மபூஷன், பத்மவிபூஷன் உள்ளிட்ட விருதுகளை வழங்கி கவுரவித்துள்ளது. இதனிடையே, 73 வயதான ஜாகிர் உசைன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார்.

இதையும் படியுங்கள் : சையது முஷ்டாக் அலி கோப்பை | சாம்பியன் பட்டம் வென்றது #Mumbai அணி!

ஜாகிர் உசைனுக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்ட காரணத்தால் அவர் கடந்த வாரம் சான்பிரான்சிஸ்கோவில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவரது உடல்நிலை இன்று மாலை திடீரென மோசமடைந்ததால் அவர் இன்று தீவிர சிகிச்சைப்பிரிவில் (ICU) அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.