‘ரெட்ரோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி மாற்றம்!

‘ரெட்ரோ’ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

கங்குவா திரைப்படத்தை தொடர்ந்து நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான திரைப்படம் ‘ரெட்ரோ’. இப்படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ளார். இதில் பூஜா ஹெக்டே, ஜோஜு ஜார்ஜ், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். 2டி மற்றும் ஸ்டோன் பெஞ்ச் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். ஆக்சன் மற்றும் காதல் கதைக்களத்தில் உருவான இப்படம் கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தில் வெளியானது.

இதையும் படியுங்கள் : “நீதிமன்ற நடவடிக்கைக்கும் ஸ்டிக்கர் ஒட்டிக்கொள்கிறீர்களே?” – இபிஎஸ் விமர்சனம்!

'ரெட்ரோ' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு! - News7 Tamil

ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்ற இத்திரைப்படம் வசூலில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படம் ரூ.250 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. ரெட்ரோ திரைப்படம் வருகிற 31ம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், தற்போது ரெட்ரோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, இப்படம் ஒரு நாள் முன்கூட்டியே அதாவது மே 30ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.