தள்ளாத வயதிலும் தளராத 92 வயது முதியவர்; குவியும் பாராட்டுகள்!

92 வயது முதியவர் ஒருவர் தனது தள்ளாத வயதிலும் தொடர்ந்து ஓடி பல சாதனைகளை படைத்து வருகிறார். இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலர் இணையத்தில் மூழ்கி ஒரே இடத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் 92…

92 வயது முதியவர் ஒருவர் தனது தள்ளாத வயதிலும் தொடர்ந்து ஓடி பல சாதனைகளை படைத்து வருகிறார்.

இன்றைய காலத்தில் இளைஞர்கள் பலர் இணையத்தில் மூழ்கி ஒரே இடத்திலேயே முடங்கி கிடக்கின்றனர். ஆனால் 92 வயது முதியவரான தத்தத்ரேயா மாரத்தான் மீது இருக்கும் அளவற்ற பற்றால் தற்போது வரை பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு சிறப்பித்து வருகிறார். இவர் வங்கி மேலாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். ஆசிய சாம்பியனான இவர் இதுவரை 5 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளார்.

இவர் 2019ம் ஆண்டில் மட்டும் 90க்கும் அதிகமான நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். கடைசியாக பெங்களூரில் நடந்த TCS World 10k போட்டியில் கலந்து கொண்டார். இளைய தலைமுறையினருக்கு முன்மாதிரியாக இருக்க வேண்டும் என நினைப்பதாக முதியவர் பெருமிதத்துடன் கூறியுள்ளார். டிஜிட்டல் தொழில்நுட்பங்களில் இளைஞர்கள் மூழ்கி கிடப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

உடலை பாதுகாக்க வேண்டியது கடமை என்றும், இளைஞர்கள் இதனை கவனத்தில் கொள்ள வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். தினமும் 5 கி.மீ தூரம் ஓடி உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Leave a Reply