பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே காலமானார்!

பின்னணி பாடகி ஆஷா போஸ்லே (92) உடல்நலக்குறைவு காரணமாக மும்பையில் காலமானார்.

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். 92 வயதான ஆஷா போஸ்லேவுக்கு நேற்று மதியம் வீட்டில் இருந்தபோது மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இந்நிலையில் சிகிச்சை பலனின்றி பாடகி ஆஷா போஸ்லே காலமானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாடகி ஆஷா போஸ்லே 20-க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளில் ஆயிரக்கணக்கான பாடல்களை பாடி கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ளார். குறிப்பாக இந்தியில் காலத்தால் அழியாத பல பாடல்களை பாடி உள்ளார். தமிழில் எங்க ஊரு பாட்டுக்காரன் படத்தில் இடம்பெற்ற ‘செண்பகமே, செண்பகமே’, ஹேராம் படத்தில் இடம்பெற்ற ‘நீ பார்த்த பார்வை’ அலை பாயுதே படத்தில் ‘செப்டம்பர் மாதம்.. செப்டம்பர் மாதம்’ உள்ளிட்ட பாடல்களை பாடி இருக்கிறார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.