முதுகலை மருத்துவர்கள் படிப்பை முடித்த பிறகு, 2 ஆண்டுகாலம் அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற வேண்டும் என்ற விதி தளர்த்தப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ மாணவர்கள் தங்களது படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்றுவதற்கான காலம், 2 ஆண்டுகளாக இருந்ததை ஓர் ஆண்டாக குறைத்து தமிழ்நாடு மருத்துவ மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசாணை வெளியிட்டுள்ளது.
இதையும் படியுங்கள் : KPY பாலா சார்பில் இலவச ஆட்டோ சேவை தொடக்கம்!
படிப்பை முடித்த பிறகு அரசு மருத்துவமனைகளில் பணியாற்ற விருப்பம் இல்லாதவர்கள் ரூ. 40 லட்சம் கட்ட வேண்டும் என்ற விதியை மாற்றி, ரூ. 20 லட்சம் கட்ட வேண்டும் என்று அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.








