கேரளாவில் தொடங்கியுள்ள தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் பெரும்பாலான இடங்களில் பரவியுள்ளது. குறிப்பாக இதனால் மேற்கு தொடர்ச்சி மலையொட்டியுள்ள மாவட்டங்களில் கனமழை பெய்து வருகின்றது.
கோவை மற்றும் நீலகிரி மாவட்டத்திற்கு கடந்த 3 நாள்கள் அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் நாளையும், நாளை மறுநாளும்(மே 29, 30) அதிகன மழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் இன்று (மே 28) நீலகிரி, கோவை, தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 5 மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் எனவும் குமரி, திருப்பூர், திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) May 28, 2025







