முக்கியச் செய்திகள் தமிழகம்

ராஜினாமா செய்ய தயார் – அமைச்சர் மூர்த்தி ஆவேசம்

மதுரையில் சார்பதிவாளர் மாற்றப்பட்ட விவகாரத்தில் குற்றச்சாட்டு உண்மை என நிரூபித்தால், ராஜினாமா செய்ய தயார் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

 

பத்திரபதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி மதுரையில் உள்ள ஒரு சார்பதிவாளரிடம் பணம் பெற்றுக்கொண்டு, ஒரே நாளில் மதுரைக்கு பணியிட மாறுதல் செய்ததாக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றச்சாட்டு தெரிவித்திருந்தார். இந்நிலயில், அதற்கு பதிலளித்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மூர்த்தி, அண்ணாமலை ஆதாரம் இல்லாமல் உண்மைக்கு புறம்பான தகவலை தெரிவித்துக் கொண்டிருக்கிறார் என்றார். பணியிட மாறுதல் செய்யப்பட்ட சார் பதிவாளர் திண்டுக்கல்லில் 25 நாட்கள் பணியாற்றிய பிறகே மதுரைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார் என விளக்கமளித்தார்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

தேவைப்பட்டால் எந்த அதிகாரியையும் எப்போது வேண்டுமானாலும் பணியிடமாறுதல் செய்யும் உரிமையும், அதனை ரத்து செய்யும் அதிகாரமும் அரசுக்கு உண்டு என தெரிவித்த அவர், தன் மீது சுமத்திய குற்றச்சாட்டை அண்ணாமலை நிரூபித்தால் தன்னுடைய அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய தயார் என்றும் ஆவேசமாக கூறினார். அப்படி நிரூபிக்க முடியாவிட்டால் அண்ணாமலை தனது பதவியை ராஜினாமா செய்வாரா? என்றும் அமைச்சர் மூர்த்தி கேள்வி எழுப்பினார்.

 

கடந்த ஆட்சியை விட இந்த ஆட்சியில் பத்திரப்பதிவு துறையின் நிர்வாகம் மிக சிறப்பாக தான் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. போலி பத்திரங்களை பதிவாளர்கள் ரத்து செய்ய அதிகாரம் வழங்கும் சட்ட முன்வடிவை, குடியரசுத்தலைவர் 7 மாதங்களாக கிடப்பில் போட்டு வைத்துள்ளதாக சாடிய அமைச்சர் மூர்த்தி, தமிழ்நாடு அரசு கொண்டு வந்த அந்த முன்மாதிரி சட்ட திருத்தத்திற்கு ஒன்றிய அரசு இன்னும் அனுமதி கொடுக்காமல் காலம் தாழ்த்தி வருகிறது என தெரிவித்தார்.

 

– இரா.நம்பிராஜன்

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

மியூசியம் ஆகிறது முன்னாள் பிரதமர் நரசிம்மராவின் பூர்வீக வீடு

Gayathri Venkatesan

கொரோனாவை ஒழிக்க மாட்டு சாண குளியலா?

மக்களை காக்கும் பணியில் தனியார் மருத்துவமனைகள் முழுமையாக ஈடுபட வேண்டும்: மு.க.ஸ்டாலின்

Halley Karthik