குற்றம்

மோடியை கொலை செய்ய தயார் என தெரிவித்த நபர் கைது..

பிரதமர் மோடியை கொலை செய்ய தயார் என முகநூலில் பதிவிட்ட நபர் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி அரியாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் சத்யானந்தம். இவர், பிரதமர் மோடியை கொலை செய்ய தயாராக இருக்கிறேன். அதற்கு ரூ.5 கோடி தர யார் தயாராக இருக்குறீர்கள் என கேள்வி எழுப்பி தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். இதை பார்த்த மணவெளி பகுதியை சேர்ந்த தங்கதுரை என்பவர், பொது அமைதி சீர்குலைக்க முயற்சித்த சத்யானந்தம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரியாங்குப்பம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரின்பேரில், போலீஸார் வழக்கு பதிவு செய்து சத்யானந்தத்தை கைது செய்தனர்.

Advertisement:
SHARE

Related posts

கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 5 பேர் கைது

Jeba Arul Robinson

மதனின் யூடியூப் சேனல்கள் முடக்கம்!

Jeba Arul Robinson

பாலியல் வன்கொடுமை வழக்கில் திருமணமான இளைஞர் கைது!

Niruban Chakkaaravarthi

Leave a Reply