விஜய் தேவரகொண்டா மாதிரி கணவர் வேண்டும் என ராஷ்மிகா போட்ட பதிவு இணையத்தில் வைராலாகியுள்ளது.
தெலுங்கு சினிமாவில் கீத கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்களில் இணைந்து நடித்து, தங்கள் ஆன் ஸ்க்ரீன் மற்றும் ஆஃப் ஸ்க்ரீன் கெமிஸ்ட்ரியால் பெரும் ரசிகர் பட்டாளத்தைப் பெற்ற ஜோடி விஜய் தேவரகொண்டா – ராஷ்மிகா மந்தனா ஜோடி. தெலுங்கு சினிமாவில் இருவரும் வளரத் தொடங்கியது முதல், பாலிவுட்டில் அடியெடுத்து வைத்தது வரை இருவரும் இணைந்தே திரைத்துறையில் வளர்ந்து வரும் நிலையில், சினிமா தாண்டி தங்கள் நிஜ வாழ்க்கையிலும் நெருக்கமான நண்பர்களாக இருவரும் வல வருகின்றனர்.
இருவரும் இணைந்து தங்கள் நண்பர் பட்டாளத்துடன் ஊர் சுற்றுவது, அவரவர் வீடுகளில் பொழுதைக் கழிப்பது என வலம் வர, இருவருக்கும் இடையே காதல் பற்றியதாகவும், இருவரும் டேட்டிங் செய்து வருவதாகவும் கடந்த சில ஆண்டுகளாகவே தகவல்கள் வந்த வண்ணம் உள்ளன.
இருவரும் ஒரே மாதிரியான உடை அணிவது, ஒரே இடத்தில் இருந்துகொண்டு அடுத்தடுத்து தங்கள் சமூக வலைதளப் பக்கத்தில் ஃபோட்டோ பகிர்வது என சோஷியல் மீடியாவில் ரசிகர்களை அலைக்கழித்து வரும் நிலையில், ரசிகர்களும் இந்த ஜோடிக்கு ஹார்ட்டின்களை பறக்கவிட்டு வருகின்றனர்.
சமீபத்தில் கூட, இவர்கள் திருமணம் செய்து கொள்ள இருப்பதாகத் தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் காட்டுத்தீயாக பரவியது. இந்த நிலையில், ராஷ்மிகா மந்தனா தனது எக்ஸ் தளத்தில் போட்ட பதிவு ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது, ராஷ்மிகாவின் டெல்லி ஃபேன்ஸ் என்ற எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, ”ராஷ்மிகா மந்தனாவின் கணவராக வருவதற்கு ஒருவர் என்ன குணங்களை கொண்டவராக இருக்க வேண்டும். ராஷ்மிகா இந்தியாவின் நேஷனல் க்ரஷ் அவரது கணவர் அவரைப் போலவே சிறப்பு வாய்ந்தவராக இருக்க வேண்டும்.
அவர் கணவர் VD மாதிரி ஒருவராக இருக்க வேண்டும். நாங்கள் ராஷ்மிகாவை ராணி என்று அழைக்கிறோம். எனவே, அவருடைய கணவரும் ஒரு ராஜாவைப் போல இருக்க வேண்டும்” என்று கூறப்பட்டிருந்தது. இதற்கு தனது எக்ஸ் பக்கத்தில் பதில் அளித்த ராஷ்மிகா, “இது மிகவும் உண்மை’ என்று சூசகமாக பதில் அளித்துள்ளார். இந்தப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.







