ராஷ்மிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.
ராஷ்மிகா 2016-ம் ஆண்டு வெளிவந்த ‘கிரிக் பார்ட்டி’ என்ற கன்னடம் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர். அழகு மட்டுமல்ல, ராஷ்மிகா செய்யும் சின்ன சின்ன க்யூட்டான செயல்கள்தான் அவருக்கு பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியது.
இயல்பான தோற்றம், சகஜமாக பேசும் குணம் இவைதான் ராஷ்மிகாவிற்கு தனி சிறப்பு. சமீபத்தில் இவர் நடித்து வெளியான ‘புஷ்பா’ படம் மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்தை தொடர்ந்து ராஷ்மிகா புஷ்பா 2 படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சுகுமார் இயக்கும் இந்த படத்தில் அல்லு அர்ஜூனுக்கு வில்லனாக ஃபகத் ஃபாசில் நடித்து வருகிறார். முதல் பகத்தில் சுனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
இந்நிலையில், ராஷ்மிகா தன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உடற்பயிற்சி செய்யும் விடியோவை வெளியிட்டுள்ளார். உடலை கவனமாகப் பேணும் நடிகைகளில் ராஷ்மிகாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.







