ரஷீத் கானின் அதிரடி ஆட்டம் வீண் – மும்பை இந்தியன்ஸ் அணி அபார வெற்றி

குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக  வெற்றிபெற்றுள்ளது.    முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  மும்பை அணியின்…

குஜராத் டைட்டன்ஸ் அணியை 27 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி அதிரடியாக  வெற்றிபெற்றுள்ளது. 

 

முதலில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து  மும்பை அணியின் தரப்பில் தொடக்க ஆட்டக்காரராக ரோஹித் ஷர்மா மற்றும் இஷான் கிஷன் ஆகியோர் களமிறங்கினர். கடந்த சில ஆட்டங்களாக அணியின் கேப்டன் ரோஹித் சர்மா  சரிவர  ஆடாததால் விமர்சனங்களை எதிர் கொண்ட நிலையில்  2 சிக்ஸர்களை பறக்க விட்டார். அடித்து ஆடிய ரோஹித் சர்ம 29 ரன்களிலும் இஷான் கிஷன் 31 ரன்களிலும் ஆட்டமிழந்தனர்.

இதன் பின்னர் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் விஷ்ணு வினோத் ஜோடி  நிலைத்து ஆடிய நிலையில் சூர்யகுமார் அதிரடியாக ஆடி 6 சிக்சர்கள் விளாசி தனது முதல் சதத்தை பதிவு செய்தார்.  நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர் முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்த மும்பை அணி 218 ரன்களை எடுத்தது. குஜராத் அணி தரப்பில் ரஷீத்கான் 4 அதிரடியாக 4 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

219 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத்  அணியின் சஹா 2 ரன்னிலும், ஷுப்மன் கில் 6 ரன், ஹர்திக் பாண்டியா 4 ரன், விஜய் சங்கர் 29 ரன்கள் என அடுத்தடுத்து ஆட்டமிழந்து ரசிகர்கள் அதிருப்தியில் ஆழ்த்தினர்.

Imageஇதன் பின்னர் இணைந்த டேவிட் மில்லர் அதிரடியாக ஆடி 41 ரன்களில் எடுத்து  ஆட்டமிழந்தார். இதனையடுத்து களமிறங்கிய ரஷீத் கான் மும்பை பந்து வீச்சாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் ஃபோர் மற்றும்  சிக்ஸர்களாக பறக்கவிட்டார். 21 பந்தில் அரைசதம் எடுத்த வீரர் என்ற சாதனையை படைத்த அவர்   இறுதிவரை அவுட் ஆகாமல் 79 ரன்கள் எடுத்திருந்தார்.  ரசீத் கான் 32 பந்துகளில்  10 சிக்ஸ் மற்றும் 3 ஃபோர்  அடித்தார். இறுதியில் 8 விக்கெட் இழப்பிற்கு குஜராத் 191 ரன்கள் தோல்வியை தழுவியது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.