முக்கியச் செய்திகள் தமிழகம்

“அதிமுக – பாமக கூட்டணி குறித்து ராமதாஸ் இன்று அறிவிப்பார்” – அன்புமணி ராமதாஸ்

அதிமுக – பாமக கூட்டணி குறித்து மருத்துவர் ராமதாஸ் இன்று அறிவிப்பார் என பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வன்னியருக்கு உள்ஒதுக்கீடு வழங்கும் மசோதா, சட்டப்பேரவையில் நேற்று (26-02-2021) நிறைவேற்றப்பட்டதை அடுத்து, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் உருக்கமாக பேசும் வீடியோ வெளியாகியுள்ளது. பாமக நிறுவனரும், அவரது தந்தையுமான மருத்துவர் ராமதாசுடன் பேசிய அவர், 40 ஆண்டு கால போராட்டம் வெற்றி பெற்றதாக கண்ணீர் மல்க கூறினார்.

தமிழக அரசின் அறிவிப்பை அடுத்து, தமிழக முதல்வர் மற்றும் துணை முதல்வரை நேரில் சந்தித்து அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், இது 40 ஆண்டு கால போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என்றார். மேலும், அதிமுக கூட்டணியில் பாமக உறுதியாக இருப்பதாகவும், அதிமுகவுடன் இன்று நடக்கும் பேச்சுவார்த்தைக்குப் பின்னர் அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வெளியிடப்படும் என்றும் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

Advertisement:
SHARE

Related posts

மெத்தை தயாரிப்பு ஆலையில் தீ விபத்து: ரூ. 1 கோடிக்கும் அதிகமான பொருட்கள் சேதம்

Gayathri Venkatesan

பன்றியின் சிறுநீரகத்தை மனிதனுக்கு பொருத்தி சாதனை

Saravana Kumar

தந்தையிடம் 10 கோடி கேட்டு மிரட்டிய 11வயது சிறுவன்!

Jayapriya