காலமானார் இந்தியாவின் வாரன்பபெட் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா

இந்தியாவின் வாரன் பபெட் என்று அழைக்கப்படும் அளவிற்கு பங்குச்சந்தை முதலீடுகளில் பிரம்மாண்டம் காட்டிய தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன் வாலா(வயது 62) மும்பையில் இன்று காலமானார். இந்திய பங்குச் சந்தை உலகில் அதிகம் பரிட்சயமான பெயர்…

இந்தியாவின் வாரன் பபெட் என்று அழைக்கப்படும் அளவிற்கு பங்குச்சந்தை முதலீடுகளில் பிரம்மாண்டம் காட்டிய தொழிலதிபர் ராகேஷ் ஜூன்ஜூன் வாலா(வயது 62) மும்பையில் இன்று காலமானார்.

இந்திய பங்குச் சந்தை உலகில் அதிகம் பரிட்சயமான பெயர் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா. பங்குச் சந்தைகளில் சுமார் 40 முன்னணி நிறுவனங்களின் கணிசமான  பங்குகளை வங்கி வைத்துள்ளார் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா. ஒரே நாளில் அவருக்கு பல நூறு கோடி ரூபாய் லாபம், அல்லது பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் என  ஜூன்ஜூன் வாலா பெயர் அடிக்கடி செய்திகளில் வருவதுண்டு. 1985ம் ஆண்டு முதல் இந்திய பங்குச் சந்தைகளில் முதலீடு செய்து வரும் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா இந்தியாவின் வாரன் பபெட்,  மும்பை பங்குச்சந்தை அமைந்துள்ள தலால் தெருவின் பெரிய காளை என்று வர்ணிக்கப்பட்டவர்.

சுமார் 45 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடைய ராகேஷ் ஜூன்ஜூன் வாலா இந்தியாவின் பணக்காரர்கள் பட்டியலில் 36வது இடத்தில் உள்ளார். சமீபத்தில் ஜெட் ஏர்வேசின் முன்னாள் தலைமைச் செயல் அதிகாரி வினய் துபே, இண்டிகோ நிறுவனத்தின் முன்னாள் தலைவர் ஆதித்யா கோஷ் உடன் இணைந்து  ”ஆகாசா” என்கிற புதிய விமான நிறுவனத்தை தொடங்கினார் ராகேஷ் ஜூன் ஜூன் வாலா

62 வயதான ராகேஷ் ஜூன்ஜூன்வாலா சிறுநீரக கோளாறு உள்ளிட்ட நோய்களால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் இன்று திடீரென இதய செயலிழப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் மும்பையில் ப்ரீச்கேண்டி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்தனர்.

ராகேஷ் ஜூன்ஜூன் வாலா மறைவிற்கு பிரதமர் மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்தியாவின்  வளர்ச்சியில் ராகேஷ் ஜூன்ஜூன்வாலா அதிக அக்கறை கொண்டிருந்ததாக தனது டிவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ள பிரதமர் மோடி, பொருளாதார உலகிற்கு ராகேஷ் ஜூன்ஜூன்வாலா ஆற்றிய பங்களிப்பு என்றும் மறுக்க முடியாதது என்றும் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.