மாநிலங்களவை தேர்தல் – மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் வேட்பு மனு தாக்கல்..!

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார். குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 மாநிலங்களவை எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ்…

ராஜ்யசபா தேர்தலில் போட்டியிட மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இன்று வேட்பு மனுத் தாக்கல் செய்தார்.

குஜராத் மாநிலத்தில் மொத்தம் 11 மாநிலங்களவை எம்பி இடங்கள் உள்ளன. இதில் பாஜக 8 எம்.பிக்களையும் காங்கிரஸ் 3 இடங்களையும் கைப்பற்றி இருந்தது. தற்போது 8 பாஜக மாநிலங்களவை எம்.பிக்களில் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர், ஜூகால்ஜி தாக்கூர், தினேஷ் அனவாதியா ஆகியோரது பதவி காலம் வரும் ஆகஸ்ட் 18-ம் தேதி முடிவடைகிறது.

இதனையடுத்து குஜராத்தில் 3 மாநிலங்களவை இடங்கள் உட்பட நாடு முழுவதும் 10 காலி இடங்களுக்கான தேர்தல் வரும் ஜூலை 24-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் பங்கேற்க மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் இன்று குஜராத் சட்டசபை வளாகத்தில், மாநிலங்களவை தேர்தலுக்கான தேர்தல் அதிகாரி ரீட்டா மேத்தா முன் வேட்புமனு தாக்கல் செய்தார்.

மாநிலங்களவை தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்த முதல் பாஜக வேட்பாளர் ஜெய்சங்கர் தான். ஆனால், மீதமுள்ள இரண்டு வேட்பாளர்களின் பெயரை பாஜக இன்னும் அறிவிக்கவில்லை. குஜராத் சட்டசபையில் போதுமான பலம் இல்லாத காரணத்தால் இந்த 3 மாநிலங்களவை எம்பி இடங்களுக்கு போட்டியிடப் போவது இல்லை என காங்கிரஸ் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.