முக்கியச் செய்திகள்இந்தியா

ராஜ்கோட் தீ விபத்து! அனுமதி இல்லாமல் விளையாட்டு மையம் இயங்கியது அம்பலம்!

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் உள்ள விளையாட்டு மைதானத்தில் ஏற்பட்ட விபத்தில் 27 பேர் உயிரிழந்த நிலையில்,  அந்த விளையாட்டு மையம் அரசின் எந்த அனுமதியும் பெறாமல் இயக்கியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

குஜராத் மாநிலம் ராஜ்கோட் நகரில் சிறுவர்களுக்கென பிரத்யேகமான டிஆர்பி விளையாட்டு மையம் (TRP game zone) உள்ளது.  அங்கு சிறாா்கள் உள்பட ஏராளமானோா் நேற்று விளையாடிக் கொண்டிருந்தனா்.  அப்போது திடீரென பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தீ கொழுந்துவிட்டு எரிந்து அந்தப் பகுதி புகை மண்டலமாகக் காட்சியளித்த நிலையில், தீயணைப்புத் துறையினா் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனா்.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த தொடா்பாக ராஜ்கோட் காவல் துறை உதவி ஆணையா் விநாயக் படேல் கூறுகையில், “விபத்தில் இதுவரை சிறாா்கள் உள்பட 27 போ் உயிரிழந்தது உறுதிசெய்யப்பட்டுள்ளது.  சடலங்கள் முற்றிலும் எரிந்துவிட்டதால், இறந்தவா் யாா் என்பதை அடையாளம் காண்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது” என்றாா்.  இந்த தீ விபத்துக்கான காரணம் இன்னும் வெளியாகாத நிலையில், விபத்து தொடா்பாக விசாரணை மேற்கொள்ள சிறப்புப் புலனாய்வுக் குழுவை (எஸ்ஐடி) மாநில அரசு அமைத்துள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.  இந்த நிலையில் தீ விபத்து நடந்த விளையாட்டு மையம்,  அரசின் தடையில்லா சான்று பெறாமலேயே இயக்கி வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.  மாநகராட்சி, தீயணைப்புத்துறை ஆகியவற்றிடம் இருந்து தேவையான எந்த அனுமதியும் பெறவில்லை எனவும்,  ஒரே ஒரு அவசர வழி மட்டுமே அங்கு இருந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  இதனிடையே சம்பவம் நடந்த இடத்தை குஜராத் முதலமைச்சர் பூபேந்திர படேல் இன்று நேரில் சென்று பார்வையிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

Share to KooShare to WhatsappShare to PinterestShare to Telegram

Related posts

கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்.

Halley Karthik

பச்சை நிற ஜெர்சியில் களமிறங்கும் பெங்களூரு அணி!

Web Editor

ரேஷன் பொருள்கள் கடத்தலைத் தடுக்க பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும் – ராதாகிருஷ்ணன்

Web Editor

Discover more from News7 Tamil

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading