மக்கள் மன்ற நிர்வாகிகளை சந்திக்கிறார் நடிகர் ரஜினிகாந்த்

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடைபெற்ற பிறகு, மக்கள் மன்ற நிர்வாகிகளை முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்திக்கவுள்ளார் நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியலுக்கு வருவது உறுதி…

தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் நடைபெற்ற பிறகு, மக்கள் மன்ற நிர்வாகிகளை முதல்முறையாக நடிகர் ரஜினிகாந்த் இன்று காலை சந்திக்கவுள்ளார்

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியலுக்கு வருவது உறுதி என கூறி தனது ரசிகர்களை உற்சாகமூட்டினார். எனினும், அந்த அறிவிப்பை கடந்த ஆண்டு டிசம்பர் 29ம் தேதி அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். இது அவரது ரசிகர்களுக்கு பெரும் ஏமாற்றமான செய்தியாக இருந்தது. இதையடுத்து, அவரது ரசிகர்களில் சிலர் மாற்று கட்சிகளில் இணைய துவங்கினர்.

இந்நிலையில், மருத்துவ சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றிருந்த நடிகர் ரஜினிகாந்த், கடந்த வெள்ளிக்கிழமை சென்னை வந்தடைந்தார். இந்த சூழலில் கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா திருமண மண்டபத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளை இன்று சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார். அரசியலில் இருந்து விலகுவதாக ரஜினிகாந்த் அறிவித்த பின்னர் முதல்முறையாக புதிதாக நியமிக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.