#Thalapathy -க்கு பின் மீண்டும் இணையும் ரஜினிகாந்த் – மணிரத்னம்?

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது.…

நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் மணிரத்னம் கூட்டணியில் புதிய படம் உருவாகவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் படத்திற்குப் பின் கூலி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இதற்கிடையே, சில நாள்களுக்கு முன் ரஜினிக்கு உடல் நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதால் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டுள்ளது.

அக். 10-ம் தேதிக்கு மேல் ரஜினி கூலி படப்பிடிப்பில் இணைவார் என இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தெரிவித்துள்ளார். அதேநேரம், இயக்குநர் மணிரத்னம் நடிகர் கமல்ஹாசனை வைத்து தக் லைஃப் படத்தை எடுத்து முடித்துள்ளார். படத்தின் அடுத்தக்கட்ட பணிகள் ஆரம்பமாகியுள்ளன.

இந்நிலையில், அடுத்ததாக நடிகர் ரஜினிகாந்த் – இயக்குநர் மணிரத்னம் கூட்டணி இணைய உள்ளதாகவும் படத்தின் அறிவிப்பு ரஜினியின் பிறந்தநாளான டிச. 12-ம் தேதி வெளியாகும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. தளபதி படத்திற்குப் பின் இக்கூட்டணி மீண்டும் இணையுமா என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.