மரணமாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினி – வெளியானது #Jailer2 படத்தின் மிரட்டலான Announcement டீசர்!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது.  கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட்…

Rajinikanth makes his death anniversary entry - The threatening announcement teaser of #Jailer2 has been released!

நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘ஜெயிலர் 2’ படத்தின் அறிவிப்பு டீசர் வெளியானது. 

கோலமாவு கோகிலா படத்தின் மூலமாக இயக்குநராக அறிமுகமானார் இயக்குநர் நெல்சன். தொடர்ந்து சிவகார்த்திகேயன் நடித்த டாக்டர், விஜய் நடித்த பீஸ்ட் உள்ளிட்ட படங்களை இயக்கினார். கடந்த 2023ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படத்தினை இயக்கி இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்தார் நெல்சன்.

இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து வசந்த் ரவி, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு, விநாயகன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார். ஜெயிலர் திரைப்படம் ரூ.600 கோடி வசூலைக் கடந்து மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது.

இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகத்தை இயக்கத் திட்டமிட்டுள்ளார் நெல்சன். தற்போது ரஜினிகாந்த் லோகேஷ் கனகராஜின் ‘கூலி’ படத்தில் நடித்து வருவதால் இதன் படப்பிடிப்பு நிறைவடந்த உடன் ‘ஜெயிலர் 2’ படப்பிடிப்பை தொடங்குவார் என்று சொல்லப்படுகிறது.

கடந்த இரு தினங்களுக்கு முன்பு, இப்படத்தின் தயாரிப்பு நிறுவனம் அடுத்த படம் குறித்த அப்டேட் வரும் 14ம் தேதி மாலை 6 மணிக்கு (இன்று) டீசராக வெளியாகும் என அறிவித்தது. அதன்படி, ‘ஜெயிலர் 2’ படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு டீசர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த டீசர் தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.