அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நிறைவு – திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் முதலிடம்!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். 

Avaniyapuram Jallikattu concludes - Karthik from Thiruparankundram comes first!

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி நிறைவடைந்த நிலையில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார். 

உலகப் புகழ்பெற்ற மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டுப் போட்டி பொங்கல் பண்டிகையை ஒட்டி இன்று காலை 6.30 மணியளவில் தொடங்கியது. இதில் பங்கேற்க 1,100 காளைகளுக்கும், 900 வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டன. முதலில் கோயில் காளைகள் அவிழ்த்துவிடப்பட்டன. அதனை தொடர்ந்து வாடிவாசலில் சீறி வந்த காளைகளை போட்டி போட்டு கொண்டு வீரர்கள் மடக்கி பிடித்தனர்.

ஒரு சுற்றுக்கு 50 வீரர்கள் காளைகளை அடக்க களமிறக்கப்பட்டனர்.
ஒவ்வொரு காளை அவிழ்த்து விட்டபோதும் 2 சக்கர வாகனம், தங்க காசு, வெள்ளி காசு, ரொக்க பணம், குக்கர், வேட்டி, அண்டா போன்ற பாத்திரங்கள் உள்ளிட்ட பரிசு பொருட்கள் அளிக்கப்பட்டன.

             கார்த்திக்                                        திவாகர்                                   முரளிதரன்

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 46 பேர் காயமடைந்த நிலையில் மதுரை விளாங்குடியை சேர்ந்த நவீன் குமார் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த நிலையில், அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று மாலை 6 மணியளவில் நிறைவடைந்தது. இதில் திருப்பரங்குன்றத்தைச் சேர்ந்த கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம் பிடித்துள்ளார்.

அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

301 – திருப்பரங்குன்றம் கார்த்திக் 19 காளைகளை பிடித்து முதலிடம்

139 – திவாகர் என்ற அரவிந்த் 15 காளைகளை பிடித்து இரண்டாம் இடம்

228 – திருப்புவனம் முரளிதரன் 12 காளைகளுடன் மூன்றாம் இடம்

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.