மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சேமிப்பு தொட்டிகளில் கட்டட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு, குப்பை தொட்டிகளாக மாறியுள்ளதாக சமூக ஆர்வலர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் மேற்க்கூரையில் கிடைக்கும் மழை நீரை சேமிக்க தொட்டிகள் அமைக்கப்பட்டன. 3 இடங்களில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், மழை நீர் சேமிப்பு தொட்டிகள் தற்போது குப்பை தொட்டிகளாக மாறி உள்ளது. மழை நீர் சேமிப்பு தொட்டிகளில் கட்டட கழிவுகள், குப்பைகள் கொட்டப்பட்டு உள்ளன.
மக்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட வேண்டிய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மழை நீர் சேமிப்பு தொட்டிகள், குப்பை தொட்டிகளாக மாற்றப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் மழை காலம் துவங்கியுள்ள நிலையில், மழை நீர் சேமிப்பு தொட்டியை பராமரிக்க சமூகநல ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளதோடு, கிடைக்க கூடிய மழை நீரை சேமிக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்தனர்.
- பி.ஜேம்ஸ் லிசா







