#RainAlert | 4 மாவட்டங்களில் வெளுத்து வாங்கப் போகும் மழை… எங்கெல்லாம் தெரியுமா?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை தொடங்கி திருப்பத்தூர் வரையிலும், வங்கக்கடல் ஓரத்தில்…

#RainAlert | Heavy rain expected in 4 districts... Do you know where?

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் கன மழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதனால் சென்னை தொடங்கி திருப்பத்தூர் வரையிலும், வங்கக்கடல் ஓரத்தில் தஞ்சாவூர் வரையிலும் கனமழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விட்டு விட்டு கனமழை பொழிந்து வருகிறது.

தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் மன்னார் வளைகுடா பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் நவ.14ம் தேதி வரை மழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதற்கிடையே, வங்கக்கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது அடுத்த இருதினங்களில் மேற்கு திசையில் தமிழக – இலங்கை கடலோரப்பகுதிகளை நோக்கி மெதுவாக நகரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் காலை முதல் வெயில் அடித்து வந்த நிலையில் தற்போது வானில் கருமேகங்கள் சூழ்ந்துள்ளன. இந்த நிலையில், தமிழ்நாட்டில் 4 மாவட்டங்களுக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.