அடுத்த 4 நாட்களுக்கு மழை தொடரும் – சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக…

தமிழகத்தில் இன்று முதல் ஜூலை 31ஆம் தேதி வரை மிதமான மழை முதல் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
மேற்கு திசை காற்றின் வேகம் மாறுபாடு காரணமாக இன்றும், நாளையும் தமிழகத்தில் பல இடங்களில் மழை பெய்யும் என்றும் புதுவை காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நீலகிரி, கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல் ஜூலை 27 முதல் 1ஆம் தேதி வரை தமிழகம், புதுவை, காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்தில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் இந்த வாரம் முழுவதும் 35 டிகிரி செல்சியஸ் வரை அதிகபட்ச வெப்பநிலை இருக்கும் என்றும் குறைந்தபட்சமாக 27 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.