அடுத்து 3மணி நேரத்தில் 7 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!

அடுத்து மூன்று மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், கடந்த சில …

அடுத்து மூன்று மணி நேரத்தில் ஏழு மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான  மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தென்மண்டல வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சியால், கடந்த சில  தினங்களுக்கு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் அதிகனமழை முதல் கனமழை  பெய்யதது. இந்நிலையில், சில நாட்களாக மழை ஓய்ந்தது. இதனையடுத்து, தென் தமிழ்நாட்டின் பல இடங்களிலும், வட தமிழகத்தின் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், திருவண்ணாமலை, ராமநாதபுரம் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.