அயர்லாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் மழை குறுக்கிட்டதால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி 2 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி நேற்று நடைபெற்றது. டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்து வீசியது. இதனையடுத்து முதலில் ஆடிய அயர்லாந்து அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 139 ரன்கள் எடுத்தது. பாரி மெக்கார்தி அதிகபட்சமாக 51 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் ஜஸ்பிரித் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, ரவி பிஷ்னோய் 2 விக்கெட் கைப்பற்றினர்.
140 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. 6.5 ஓவரில் 2 விக்கெட் இழப்புக்கு 47 ரன்கள் எடுத்திருந்தபோது மழை குறுக்கிட்டது. மழை தொடர்ந்ததால் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி இந்தியா 2 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஜெய்ஸ்வால் 24, ருதுராஜ் 19 எடுத்தனர்.







