ஆப்கானிஸ்தானில் மழை வெள்ளத்தால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஒரே நாளில் 26 ஆக உயர்ந்துள்ளது.
மத்திய ஆப்கானிஸ்தானில் பெய்த கனமழையால் கடந்த 21ம் தேதி பெருவெள்ளம் ஏற்பட்டது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகள் நீரில் மூழ்கின. ஏராளமான மக்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டனர்.
காணாமல் போன 40 பேரை மீட்கும் பணி நடைபெற்றும் வரும் நிலையில், மழை வெள்ளத்தால் இதுவரை 31 பேர் உயிரிழந்ததாக ஆப்கானிஸ்தான் அரசு தெரிவித்துள்ளது.







