முக்கியச் செய்திகள் தமிழகம்

“ரெய்டு தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும்“ – ஆர்.பி.உதயக்குமார்

டாக்டர் விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் நடத்தப்படும் சோதனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் என நிரூபித்து காட்டுவார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

திமுக ஆட்சி பொறுப்பேற்றபின் கந்தசாமி லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபியாக நியமிக்கப்பட்டார். அதன்பின் ஊழல் புகார்களுக்கு உள்ளான முன்னாள் அதிமுக அமைச்சர்கள் கே.சி.வீரமணி, எம்.ஆர்.விஜயபாஸ்கர், எஸ்.பி.வேலுமணி ஆகியோரது வீடுகளில் லஞ்ச ஒழிப்பு சோதனை மேற்கொள்ளப்பட்டது.

நேரடியாக கூகுள் செய்திகளிலிருந்து நியூஸ் 7 தமிழ், இணையதளத்தின் செய்திகளை உடனுக்குடன் பெற Google News பக்கத்தை Follow செய்யுங்கள்

இந்த நிலையில், வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில், முன்னாள் அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி ரம்யா ஆகியோர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்து சோதனை நடத்தி வருகின்றனர். சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான புதுக்கோட்டை வீடு மற்றும் கல்வி நிறுவனங்களில் அதிகாலை முதல் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருச்சி உள்ளிட்ட 43 இடங்களில் சோதனை தொடர்கிறது.

இந்நிலையில், டாக்டர் விஜயபாஸ்கர் மீது நடத்தப்படும் சோதனை தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும், அவர் குற்றமற்றவர் என நிரூபித்து காட்டுவார் என்று முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேட்டியளித்துள்ளார்.

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு அஇஅதிமுக – வின் பொன்விழா ஆண்டை முன்னிட்டு முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், உசிலம்பட்டி எம்எல்ஏ அய்யப்பன் தலைமையிலான அதிமுக நிர்வாகிகள் முன்னாள் முதல்வர்களான எம்ஜிஆர் – ஜெயலலிதா திருஉருவ படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்., வரும் நவம்பர் டிசம்பரில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ள சூழலில் பேரிடர் காலங்களில் மிகவும் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளை கடந்த ஆட்சிக்காலத்திலேயே கண்டறிந்து அந்த பகுதியில் உள்ள மக்களை பாதுகாப்பு செய்தோம். தற்போதைய முதல்வரும் பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னெடுத்து மாவட்ட ஆட்சியர்களுடனான ஆலோசனையை காணொளி வாயிலாக நடத்தியதாக செய்திகளின் வாயிலாக அறிந்தோம். இருந்த போதும் பல இடங்களில் உயிரிழப்புகள் ஏற்படுவது வேதனை அளிப்பதாகவும், பேரிடர் கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்தி மக்களை பாதுகாக்க வேண்டும் எனவும் கூறினார். தொடர்ந்து பேசிய அவர்,

டாக்டர் விஜயபாஸ்கர் கடந்த ஆட்சி காலத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சராக இருந்த போது தமிழகத்திற்கு பல்வேறு தேசி விருதுகளை பெற்று தந்தவர், அதிமுக எனும் இயக்கத்திற்கும் தனது உழைப்பாலும், சேவையாலும் பல வெற்றிகளை பெற்று தந்தவர். அவரது வீடுகளில் சோதனை என்பது தவிர்க்கப்பட வேண்டிய ஒன்று, தடுக்க முடியாத ஒன்றாக இருந்தாலும் அவர் குற்றமற்றவர் என்பதை நிரூபிக்கும் காலகட்டத்தில் உள்ளார் நிச்சயமாக நிரூபிப்பார்.

இதற்கு முன்பு நடைபெற்ற சோதனைகளின் போதும் இன்றும் முன்னாள் முதல்வர் ஈபிஸ், துணை முதல்வர் ஓபிஎஸ் தலைமை கழகத்தின் சார்பில் தங்கள் கண்டனங்களை தெரிவித்துள்ளனர். அரசு பேரிடர் காலங்களில் மக்களை காக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும் என்பதே மக்களின் எண்ணமாகவும் உள்ளது என பேட்டியளித்தார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.
Advertisement:
SHARE

Related posts

ட்விட்டரில் டிரெண்டாகும் ஹாஷ்டேக் ‘WeStandWithSuriya’

Halley Karthik

3-வது நாளாக தொடரும் வருமானவரித்துறை சோதனை

Web Editor

குஜராத் தேர்தல்; 89 தொகுதிகளில் இன்றுடன் பிரசாரம் நிறைவு

G SaravanaKumar