ராகுல் காந்தியிடம் 2வது நாளாக விசாரணை

நேஷ்னல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர். நேஷ்னல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர்…

நேஷ்னல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தியிடம், அமலாக்கத்துறை அதிகாரிகள் இரண்டாவது நாளாக இன்றும் விசாரணை நடத்தினர்.

நேஷ்னல் ஹெரால்டு நிதி மோசடி வழக்கில் காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி அமலாக்கத்துறை விசாரணையில் முதல்முறையாக நேற்று ஆஜரானார். நேற்று அவரிடம் சுமார் 10 மணி நேரம் விசாரணை நடைபெற்றது. அமலாக்கத்துறை துணை இயக்குநர், அவரிடம் விசாரணை நடத்தினார். அமலாக்கத்துறை இணை இயக்குநர்கள் இருவர் இந்த விசாரணையை கண்காணித்தனர். மேலும், ராகுல் காந்தியிடம் கேட்கப்பட்ட கேள்விகள், அவர் அளித்த பதில்கள் அனைத்தும் பதிவு செய்யப்பட்டன.

இதையடுத்து, இன்று மீண்டும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று அமலாக்கத்துறை நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து, ராகுல் காந்தி இன்றும் விசாரணையில் ஆஜரானார்.

நேற்றைய தினத்தில் நடைபெற்றது போன்றே, இன்றும் ராகுல் காந்திக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்களும் தொண்டர்களும் டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் ஈடுபட்ட சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பெகல், காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா உள்ளிட்ட தலைவர்கள் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக, விசாரணையில் ஆஜராகும் முன், ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும், கட்சியின் மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினர். அப்போது, காங்கிரஸ் தலைவர்களும், தொண்டர்களும் ராகுலுக்கு ஆதரவாக தொடர்ந்து இருப்பார்கள் என உறுதி அளிக்கப்பட்டது.

ராகுல் காந்திக்கு ஆதரவாக போராட்டம் தொடரும் என்று பூபேஷ் பெகல் தெரிவித்தார்.

சட்டத்தின் அடிப்படையில் அமலாக்கத்துறை நடவடிக்கை எடுக்குமானால் அதில் தங்களுக்கு பிரச்னை இல்லை என தெரிவித்துள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் ப. சிதம்பரம், அமலாக்கத்துறை எவ்வித சட்டத்தையும் பின்பற்றவில்லை என குற்றம் சாட்டினார்.

டெல்லியில் நடைபெற்று வரும் தொடர் போராட்டங்கள் காரணமாக அமலாக்கத்துறை அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியிடம் வரும் 23ம் தேதி விசாரணை நடத்த அமலாக்கத்துறை திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.