முதல்வரின் ‘உங்களில் ஒருவன்’ நூலை வெளியிடுகிறார் ராகுல்காந்தி

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ எனும் சுயசரிதை நூலை சென்னையில் இன்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வெளியிட உள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் என்ற சுய சரிதை நூலின்…

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள ‘உங்களில் ஒருவன்’ எனும் சுயசரிதை நூலை சென்னையில் இன்று காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி வெளியிட உள்ளார்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எழுதியுள்ள உங்களில் ஒருவன் என்ற சுய சரிதை நூலின் முதலாவது பாகம் இன்று நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையகூட்டரங்கில் நடக்கும் விழாவில் வெளியிடப்படுகிறது.

நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையிலும், திமுக எம்பி டி.ஆர்.பாலு முன்னிலையிலும் விழா நடைபெறுகிறது.

விழாவில் திமுக மகளிர் அணி செயலாளரும் எம்பியுமான கனிமொழி வரவேற்று பேசுகிறார். காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, புத்தகத்தை வெளியிட்டு சிறப்புரையாற்றுகின்றார்.

விழாவின் இறுதியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஏற்புரை நிகழ்த்துகிறார். விழாவில் கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதலமைச்சர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.