ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து வெளியேறிய ரபேல் நடால்; ரசிகர்கள் அதிர்ச்சி

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார் ரபேல் நடால். ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற உலகின் தலை சிறந்த வீரர்களுள்…

ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து அதிர்ச்சி தோல்வி அடைந்து வெளியேறினார் ரபேல் நடால்.

ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடர் மெல்போர்ன் நகரில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்ற உலகின் தலை சிறந்த வீரர்களுள் ஒருவரான ரபேல் நடால் உலகில் 65-வது இடத்தில் இருக்கும் அமெரிக்காவை சேர்ந்த வீரர் மெக்கன்சி மெக்டொனால்ட் உடன் இரண்டாவது சுற்றில் மோதினார்.

இந்த பரபரப்பான  சுற்றில் யாரும் எதிர்பார்க்காத விதமாக ரபேல் நடாலுக்கு காயம் ஏற்பட்டது. எனினும் அதனை பொருட்படுத்தாமல் விளையாடினார் ரபேல் நடால்.

இந்த சுற்றில் காயத்தினால் மிகவும் அவதிப்பட்ட  நடால், முதல் மூன்று செட்டுகளையுமே, 4-6, 4-6, 5-7 என கைவிட்ட நடால் 3-0 என தோல்வியுற்று தொடரில் இருந்து வெளியேறினார். நடால் காயம் காரணமாக இயல்பான ஆட்டத்தை வெளிப்படுத்த இயலாத நிலையில், அவர் தோல்வி பெற்று வெளியேறிய போது அவரது ரசிகர்கள் மற்றும் அவரது மனைவி கண்ணீர் விட்டு அழுத காட்சி காண்போரை சோகத்தில் ஆழ்த்தியது.

https://twitter.com/travel__Sports/status/1615604290751537153?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1615604290751537153%7Ctwgr%5E909d3739687835de46d78ddb7f2bb0a9f72385f4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.hindustantimes.com%2Fsports%2Frafael-nadal-wife-cries-when-he-gets-off-court-for-an-injury-break-131674031855341.html

கடந்த முறை ஆஸ்திரேலியா ஓபன் டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற ரபேல் நடால், இந்த முறை தொடரின் ஆரம்பத்திலேயே வெளியேறுவது ரசிகர்களுக்கு மிகுந்த சோகத்தை அளித்துள்ளது.

https://twitter.com/travel__Sports/status/1615586887309164547?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1615586887309164547%7Ctwgr%5E909d3739687835de46d78ddb7f2bb0a9f72385f4%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Ftamil.hindustantimes.com%2Fsports%2Frafael-nadal-wife-cries-when-he-gets-off-court-for-an-injury-break-131674031855341.html

ஆஸ்திரேலியா ஓபன் தொடரை இந்த முறையும் வென்று தனது 23-வது கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வெல்வார் என எதிர்பார்த்த அவர் ரசிகர்களுக்குப் பெறும் ஏமாற்றமே மிஞ்சியது.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.