மாணவர்களை மீட்க துரித நடவடிக்கை: மக்களவைத் தலைவர் ஓம்பிர்லா

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை துரிதமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்களவை தலைவர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார். சென்னை இராயபேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சென்னையில் வசிக்கும் ராஜஸ்தான் ஜெயின்…

உக்ரைனில் உள்ள இந்திய மாணவர்களை துரிதமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாக மக்களவை தலைவர் ஓம்பிர்லா தெரிவித்துள்ளார்.

சென்னை இராயபேட்டையில் உள்ள நட்சத்திர விடுதியில் சென்னையில் வசிக்கும்
ராஜஸ்தான் ஜெயின் சமாஜத்தின் சார்பில் தொழிலதிபர்களின் ஒன்று கூடல் நிகழ்ச்சி
நடைபெற்றது. இதில் அகில இந்திய ஜெயின் கான்பரன்ஸ் தலைவர் ஆனந்த்வந்த் ,
பொருளாளர் பதம் காங்கர்யா, துணை தலைவர் சுரேஷ் ஜெயின் ஆகியோர் பங்கேற்ற இந்நிகழ்வில் மக்களவை தலைவர் ஓம்பிர்லா சிறப்பு விருந்தினராக பங்கேற்றார்.

நிகழ்வில் அதிமுக மக்களவை உறுப்பினர் ரவீந்திரநாத் , ஓம்பிர்லா விற்கு
பொன்னாடை அணிவித்து மரியாதை செய்தார். பின்னர் மேடையில் பேசிய
ஓம்.பிர்லா கூறியதாவது,

இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை கொண்ட நாடு என்றும் .
சமுதாயத்தில் உள்ள பிரச்சனைகளை அகற்றி அதை மேம்படுத்துவதே சமுதாயத்தின்
நோக்கம் எனவும் தெரிவித்தார். வேலைகளை வழங்கும் நிறுவனத்தை நிறுவி, மக்களின் தரத்தை மேம்படுத்துவதன் மூலம் ஜெயின் சமாஜ் சிறந்த சேவையை செய்துள்ளதாக புகழாராம் சூட்டிய அவர் மற்ற நாடுகள் முன்னேறும் திசையில், நாம் முன்னணி பொருளாதார சக்திகளில் ஒன்றாக இருப்போம் எனவும் தெரிவித்தார்.

கொரோனா தொற்றின் போது பல சவால்கள் இருந்தாலும் நமது செல்வத்தை சமூகத்தின்
வளர்ச்சியில் முதலீடு செய்வது நமது கலாச்சாரம், அதை நம் மக்கள் ஒன்றிணைந்து
செய்யவேண்டும் என தெரிவித்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் , உக்ரைன் விவகாரத்தில் அரசு மிகவும் துரிதமாக நடவடிக்கை எடுத்து வருவதாகவும். அரசால் அங்குள்ள இந்திய மக்களின் பிரச்சனைகளை புரிந்து கொள்ள முடிகிறது என தெரிவித்த அவர். உக்ரேனில் உள்ள இந்திய மாணவர்களை துரிதமாக மீட்டு இந்தியாவிற்கு அழைத்து வர அரசு நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

 

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.