திருமயம் அருகே, ராங்கியம் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதியில்
கோழியை விழுங்கிய நிலையில், பிடிபட்ட மலைப்பாம்பை உயிருடன்
பிடித்து வனத்துறையிடம் தீயணைப்பு வீரர்கள் ஒப்படைத்தனர்.
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அருகே உள்ள ராங்கியம் கிராமத்தில் பொன்னழகி நகர் குடியிருப்பு பகுதி அருகாமையில், உலா வந்து அப்பகுதி மக்களை அச்சுறுத்திய சுமார் 9 அடி மலை பாம்பு ஒன்று, கோழியை விழுங்கிய நிலையில் கண்ட அப்பகுதி
மக்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
அச்சப்பட்டு உடனடியாக திருமயம் தீயணைப்பு மற்றும் மீட்புப் பணியினருக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த திருமயம் நிலைய அலுவலர் மணிகண்டன் தலைமையிலான குழுவினர், புதருக்குள் நெளிந்து இருந்த மலைப்பாம்பை உயிரோடு பிடித்து, வனத்துறையிடம் ஒப்படைத்தனர்.
கு. பாலமுருகன்




