2019-ல் ஜப்பான் நாட்டு வீராங்கனை நொசோமி ஒகுஹாராவை தோற்கடித்து உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கம் வென்றார். இதன் மூலம் உலக பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமையை பெற்றார். இதேபோட்டியில் 2017-ல் ஒகுஹாராவிடம் தோல்வியடைந்த பி.வி. சிந்து, 2019-ல் 38 நிமிடங்களிலேயே அவரை தோற்கடித்து அசத்தினார்.
2016 ரியோ ஒலிம்பிக்கில் ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினை எதிர்கொண்டு தோல்வியடைந்தாலும் இந்தியாவுக்கு வெளிப்பதக்கம் பெற்றுத் தந்தார். 2016-ல் யாரிடம் தோற்றாரோ அவரையே 2017 இந்தியா ஓப்பன் பாட்மிண்டன் போட்டியில் எதிர்கொண்டு தோற்கடித்தார்.
சீனா ஓப்பன் சூப்பர் சிரீஸ் 2016 போட்டியில், சன் ஹூ வை தோற்கடித்து சீனா ஓப்பன் சூப்பர் சிரீஸை வெல்லும் இரண்டாவது இந்தியர் என்ற பெருமையையும் பெற்றார் பி.வி.சிந்து.
BWF டூர் ஃபினலே 2018 போட்டியில் நொசோமி ஒகுஹாராவை தோற்கடித்து வெற்றிபெற்றார். BWF உலக சாம்பியன் போட்டியில் மீண்டும் ஒகுஹாராவை தோற்கடித்தார்.
ஆடுகளத்தில் அசத்தும் வீராங்கனைகள்
இருவரும் 17 முறை ஒருவரை ஒருவர் எதிர்கொண்டுள்ளனர். இதில் 9 போட்டியில் ஒகுஹாராவை பி.வி சிந்து வென்றுள்ளார். 8 போட்டியில் ஒகுஹாரா சிந்துவை தோற்கடித்துள்ளார். பேட்மிண்டன் வலையின் உயரம்கூட இல்லாத நொசோமி, வேகமாக ஸ்டேடியம் முழுவதும் நகர்ந்து பந்துகளை எதிர்கொள்ளும் ஆற்றல் கொண்டவர். உயரமாக இருக்கும் பி.வி சிந்து ராட்ச வேகத்தில் பந்துகளை அடித்து ஆடுவார்.
இதுகுறித்து தனது ஆட்டம் குறித்து பி.வி.சிந்து கருத்து கூறுகையில், “ஒவ்வொரு முறை நாங்கள் விளையாடும்போது, அது புதிய ஆட்டமாகவே எனக்கு தோன்றும்” என குறிப்பிட்டுள்ளார்.இவர் ஹைதராபத்தில் 1995 ஆம் ஆண்டு பிறந்தார். இவர் போட்டியில் வெற்றிபெற்றதும் திருப்பதி கோவிலுக்கு செல்வதை வழக்கமாக கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.










