‘புஷ்பா 2’ பட குழுவினர் சாலை விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்துள்ள சம்பவம், திரை உலக்கினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அல்லு அர்ஜீன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான புஷ்பா திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. ராஷ்மிகா மந்தனா நாயகியாக நடித்திருந்த இப்படத்தில் ஃபகத் பாசில், சுனில், அஜய் கோஷ், மைம் கோபி உட்பட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தனர். சுகுமார் இயக்கிய இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைத்திருந்தார்.
தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னட உள்ளிட்ட மொழிகளில் வெளியான இப்படம் இந்தியில் அதிக வசூலை ஈட்டியது. இந்தியில் மட்டும் ரூ,100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. புஷ்பா படத்தின் இரண்டாம் பாகம் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் காத்திருந்தினர்.
அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் இரண்டாம் பாகத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. அந்த வகையில் ‘புஷ்பா 2’ திரைப்படம், இந்த ஆண்டு டிசம்பர் மாதம் 22ஆம் தேதி வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், பட குழுவினர் படப்பிடிப்புக்கு சென்ற வழியில் எதிரே வந்த பேருந்தும் புஷ்பா 2 படக்குழுவினர் சென்ற பேருந்தும் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் படுகாயம் அடைந்த புஷ்பா 2 படத்தின் படக்குழுவினர்கள் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.








