எளிதாக சென்னை அணியை வீழ்த்தியது பஞ்சாப்

சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது.  சென்னை, பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை…

சென்னை அணியை 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி பஞ்சாப் அணி வெற்றி பெற்றது. 

சென்னை, பஞ்சாப் அணிகள் இடையிலான போட்டி இன்று துபாயில் நடைபெற்றது. இதில், பஞ்சாப் அணி டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களமிறங்கிய சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 134 ரன்கள் சேர்த்தது. சென்னையில் அதிகபட்சமாக பாஃப் டூ பிள்ஸிஸ் 76 ரன்கள் விளாசியிருந்தார். இதையடுத்து 135 ரன்கள் என்ற எளிய இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது.

அணியின் தொடக்க வீர்ர்களாக கே.எல்.ராகுல், மயங்க் அகர்வால் களமிறங்க்னர். இதில், மயங்க் அகர்வால் 12 ரன்னில் வெளியேற பின்னர் வந்த சர்பராஸ் கான் ரன் ஏதும் எடுக்காமலும், ஷாரு கான் 8 ரன்னிலும் வெளியேறினர்.

பின்னர் வந்த வீர்ர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற கே.எல் ராகுல் தனி ஒருவனாக அணியின் சென்னை அணியின் பந்து வீச்சை மைதானத்தின் நாளா புறமும் சிதறடித்து பஞ்சாப் அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றார். 13 ஓவர்கள் முடிவில் பஞ்சாப் அணி 4 விக்கெட்டுகளை இழந்து 139 ரன்களை சேர்த்து வெற்றி பெற்றது. அணியில் அதிகபட்சமாக கே.எல்.ராகுல் 42 பந்துகளில் 98 ரன்கள் விளாசினார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.