பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி

15-வது ஐபிஎல்-ன் 23-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது. 15-வது ஐபிஎல்-ன் 23-வது போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை…

15-வது ஐபிஎல்-ன் 23-வது போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

15-வது ஐபிஎல்-ன் 23-வது போட்டி மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணி களம்கண்டன.

இதற்கு முன்பு, மும்பை இந்தியன்ஸ் அணி, டெல்லி கேபிடல்ஸ் அணியுடன் மோதியது. அதில் 10 பந்துகள் மீதம் இருக்கும் நிலையில், 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, மும்பை இந்தியன்ஸ் அணியுடன் மோதியது, அதில் 23 ரன்கள் வித்தியாசத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றி பெற்றது.

இதேபோல, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் களம்கண்டன, இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 24 பந்துகள் மீதமிருக்கும் நிலையில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

அதனைத்தொடர்ந்து, 15-வது ஐபிஎல்-ன் 18-வது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் களம் கண்டது மும்பை இந்தியன்ஸ் அணி, அதில் 9 பந்துகள் மீதம் இருந்த நிலையில், 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வெற்றிபெற்றது.

இதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியுடன் களம் கண்டது. அதில் 6 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

அதேபோல, பஞ்சாப் கிங்ஸ் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் களம் கண்டது அதில் 33 பந்துகள் மீதமிருக்கும் நிலையில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றி பெற்றது.

தொடர்ந்து, பஞ்சாப் கிங்ஸ் அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடம் மோதியது அதில், 54 ரன்கள் வித்தியாசத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி வெற்றி பெற்றது.

பின்னர், பஞ்சாப் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது அதில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத் டைட்டன்ஸ் அணி வெற்றி வாகை சூடியது.

அதனைத்தொடர்ந்து, இன்று பஞ்சாப் கிங்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதியது. இதில் டாஸ் வென்ற, மும்பை அணி பந்து வீச்சை தேர்வு செய்தது.

இதனால், முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில், 198 ரன்களை எடுத்து. இதனால், மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 199 ரன்கள் வெற்றி இலக்காக அமைந்தது. அதனைத்தொடர்ந்து பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவர் முடிவில் 186 ரன்களை மட்டுமே எடுத்தது. இதனால், பஞ்சாப் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.