புதுச்சேரி முதல்வர் என்.ரங்கசாமி பிறந்தநாள் – பிரதமர் மோடி வாழ்த்து!

புதுச்சேரி முதலைச்சர் என்.ரங்கசாமியின் 75ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு தலைவர்களும் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் முதல்வரும், N.R.காங்கிரசின் நிறுவனருமான ரங்கசாமி இன்று தனது 75வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
அவரது பிறந்தநாளையொட்டி புதுச்சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முதலமைச்சரை அவரது இல்லத்தில் சந்தித்து,  சால்வை அணிவித்தும், பூங்கொத்து கொடுத்து பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தார்.

மேலும் ரங்கசாமி அவர்களுக்குப் எக்ஸ் தளத்தில் பிறந்தநாள் வாழ்த்துகள் தெரித்த தமிழக முதலைச்சர் ஸ்டாலின், எப்போதும் மகிழ்ச்சியோடும் மங்காத உடல்நலத்தோடும் திகழ்ந்திட விழைகிறேன் என்று தெரிவித்துள்ளார். பல்வேறு தலைவர்களும் அரசி அதிகாரிகளும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில் பிரதமர் மோடியும் என். ரங்கசாமிக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ”புதுச்சேரி முதலமைச்சர் திரு. என். ரங்கசாமி அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் புதுச்சேரிக்கு சிறந்த தலைமைத்துவத்தை வழங்கி மக்களின் விருப்பங்களை நிறைவேற்றி வருகிறார். அவர் நீண்ட மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.