புரோ கபடி லீக் | புனேரி பால்டன் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதல்

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புனேரி பால்டன் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன. 11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது.…

புரோ கபடி லீக் போட்டியின் இன்றைய ஆட்டத்தில் புனேரி பால்டன் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் இன்று மோதுகின்றன.

11-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஹைதராபாத்தில் நடந்து முடிந்தன. இதையடுத்து தொடரின் 2-வது கட்ட லீக் போட்டிகள் நொய்டாவில் நடைபெற்று வருகின்றன.

இந்த தொடரில் இன்று 2 லீக் போட்டிகள் நடைபெறுகின்றன. அதில் இரவு 8 மணிக்கு தொடங்கும் ஆட்டத்தில் புனேரி பால்டன் – பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோத உள்ளன. தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் பாட்னா பைரேட்ஸ் – உ.பி. யோத்தாஸ் அணிகள் மோதுகின்றன.

இதையும் படியுங்கள் : இன்று தொடங்குகிறது ஐபிஎல் வீரர்கள் ஏலம் – #CSK அணியின் மீதத் தொகை, வீரர்கள் மற்றும் விவரங்கள் இதோ!

இந்த தொடரில் இதுவரை நடந்துள்ள லீக் போட்டிகளின் முடிவில் புள்ளிப்பட்டியலில் பாட்னா பைரேட்ஸ் 5-வது இடத்திலும், புனேரி பால்டன் 6-வது இடத்திலும் உள்ளது. மேலும், உ.பி. யோத்தாஸ் 8-வது இடத்திலும், பெங்கால் வாரியர்ஸ் 10-வது இடத்திலும் உள்ளது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.