புரோ கபடி லீக் | பெங்கால் வாரியர்ஸ் அணியை வீழ்த்தியது பெங்களூரு புல்ஸ்!

புரோ கபடி லீக் தொடரில் பெங்கால் வாரியர்ஸ் அணியை பெங்களூரு புல்ஸ் வீழ்த்தியது.

புரோ கபடி லீக் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது டெல்லியில் லீக் ஆட்டங்கள் நடந்து வருகிறது. இந்த தொடரில் நேற்று (அக்.12) நடைபெற்ற முதல் ஆட்டத்தில் தபாங் டெல்லி – புனேரி பால்டன் அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதில் இருந்து இரு அணிகளும் பரபரப்பாக புள்ளிகளை சேகரிக்க தொடங்கின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் இறுதியில் 38-38 என்ற கணக்கில் டிராவில் முடிந்தது.

இதையும் படியுங்கள் : மகளிர் உலகக்கோப்பை | இந்திய அணியை வீழ்த்தி ஆஸ்திரேலியா அபார வெற்றி!

தொடர்ந்து, நடைபெற்ற டை பிரேக்கரில் 6-5 என்ற புள்ளிகள் கணக்கில் புனேரி பால்டன் அணி பெற்றது. தொடர்ந்து இரவு 9 மணிக்கு தொடங்கிய மற்றொரு ஆட்டத்தில் பெங்கால் வாரியர்ஸ் அணி பெங்களூரு புல்ஸை எதிர்கொண்டது. அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய இரு அணி வீரர்களும் மாறி மாறி புள்ளிகளை அள்ளினர்.

ஆட்டம் பரபரப்பாக நடந்த நிலையில் எந்த அணி வெற்றி பெற போகிறது என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருந்தனர். முடிவில் 43-32 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. இதற்கிடையே, இன்று நடைபெறும் ஆட்டங்களில் பாட்னா பைரட்ஸ் – ஹரியான ஸ்டீலர்ஸ் அணிகளும், யு மும்பா – யுபி யோத்தாஸ் அணிகளும் மோதுகின்றன.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.