இங்கிலாந்து இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் பீட்சா டெலிவரியில் ஈடுபட்ட படங்கள் இணையத்தில் வைரலாகியுள்ளன.
இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் மறைந்த இளவரசி டயானா தம்பதியினரிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்களில் மூத்த மகன் இளவரசர் வில்லியம் மற்றும் இளைய மகன் இளவரசர் ஹாரி ஆவர். இளவரசர் வில்லியமுக்கு கேத்ரின் மிடில்டன் என்கிற மனைவியும் மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேத்ரின் மிடில்டன் புதிய முயற்சிகளை செய்து அவ்வபோது இணையத்தில் பேசுபொருளாவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு இந்திய உணவகத்திற்கு சென்ற இளவரசர் வில்லியம் அந்த உணவகத்தில் வரவேற்பரையில் உள்ள தொலைபேசியில் வாடிக்கையாளரிடம் நேரடியாக பேசி உணவு ஆர்டரை எடுத்தார்.
மேலும் அந்த உணவகத்தில் உள்ள சமையல் அறையில் நுழைந்த இளவரசர் வில்லியம் தனது மனைவிக்கு தானே சப்பாத்தி சமைத்து கொடுத்த வீடியோ இணைய ரசிகர்களால் பேசு பொருளானது.
அந்த வகையில் கடந்த 27ம் தேதி இளவரசர் வில்லியம் மற்றும் அவரது மனைவி கேட் மிடில்டன் ஆகிய இருவரும் சென்ட்ரல் பீக்கன்ஸ் மலைப்பகுதியில் உள்ள மீட்புக் குழுவைச் சந்திப்பதற்காக சென்றனர். அவர்கள் தங்கள் உயிரைப் பணயம் வைத்து அருகிலுள்ள மலைத்தொடரில் நடப்பவர்களையும், ஏறுபவர்களையும் பாதுகாப்பதற்கு உதவுகிறார்கள்.
அவர்களுக்காக லிட்டில் டிராகன் பீட்சா நிறுவனத்திடம் இருந்து 22 பீட்சாக்களை இளவரசர் வில்லியம் ஆர்டர் செய்தனர். அதனை பீட்சா வேனில் இருந்து தாங்களே வாங்கி கொண்டு மீட்பு குழுவினருக்கு வழங்கினர். இளவரசர் வில்லியம் மற்றும் கேத்ரின் மிடில்டன் ஜோடி பீட்சா டெலிவரி செய்த படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.







