ஜப்பானின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள #ShigeruIshiba-வுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து!

ஜப்பானின் பிரதமராக பதவியேற்றுள்ள ஷிகேரு இஷிபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்தப் பதிவில், “ஜப்பான்…

ஜப்பானின் பிரதமராக பதவியேற்றுள்ள ஷிகேரு இஷிபாவுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடி தனது எக்ஸ் தளப் பக்கத்தில் வாழ்த்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ஜப்பான் பிரதமர் ஷிகேரு இஷிபாவுக்கு மனமார்ந்த வாழ்த்துகள். இந்தியா-ஜப்பான் உலகளாவிய கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தவும், இந்தோ-பசிபிக்கில் அமைதி மற்றும் செழிப்பை மேம்படுத்தவும் உங்களுடன் நெருக்கமாக பணியாற்ற நான் விரும்புகிறேன்” எனப் பதிவிட்டுள்ளார். ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஃபுமியோ கிஷிடா ஊழல் வழக்கில் சிக்கி பதவி விலகியதையடுத்து ஷிகேரு இஷிபா புதிய பிரதமராக பதவியேற்றிருப்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.