பிரதமர் மோடி இந்தோனேசிய பயணம்..!

பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோநேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி 6 நாள் அரசுமுறை பயணமாக இந்தோநேசிய, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். அதன்படி பிரதமர் மோடி இன்று இந்தோநேசியாவுக்கு புறப்படுகிறார். இன்று முதல் 8-ஆம் தேதி வரை இண்ட்தோனேசியா செல்லும் பிரதமர் மோடி இந்தப் பயணத்தின்போது, அந்நாட்டு அதிபர் பிரபோவோவுடன் பிரதமர் இருதரப்புப் பேச்சுவார்த்தைகளை நடத்துவதுடன், இந்தக் கூட்டாண்மையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்களையும் ஆய்வு செய்ய உள்ளார். மேலும் ஜகார்த்தாவில் வசிக்கும் இந்திய வம்சாவளியினரிடையே பிரதமர் உரையாற்ற உள்ளார். இதனைத் இந்தோனேசியாவில் உள்ள யுனெஸ்கோ உலகப் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றான யோக்யகர்த்தாவில் உள்ள பிரம்பனன் கோயில் வளாகத்தையும் பிரதமர் மோடி பார்வையிடுகிறார். இது பிரதமரின் நான்காவது இந்தோனேசியப் பயணமாகும்.

இந்தோனேசியாவிலிருந்து ஜூலை 8-ஆம் தேதி ஆஸ்திரேலிய செல்லும் பிரதமார் அங்கு 10 வரை சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அங்கு ஆஸ்திரேலிய கவர்னர் ஜெனரல் சாம் மோஸ்டினை சந்திக்க உள்ளார். மேலும் ‘இந்திய-ஆஸ்திரேலிய தலைமைச் செயல் அதிகாரிகள் மன்றக்’ கூட்டத்தில் பங்கேற்று, இரு நாடுகளையும் சேர்ந்த முன்னணித் தொழில் தலைவர்கள் மத்தியில் பிரதமர் உரையாற்ற உள்ளார். \

இதனைத்தொடர்ந்து, ஜூலை 10-ஆம் தேதி நியூசிலாந்து செல்லும் அவர் நியூசிலாந்து பிரதமர் கிறிஸ்டோபர் லக்சனுடன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார். மேலும் இந்தியா மற்றும் நியூசிலாந்துக்கு இடையே நிலவும் வலுவான மக்கள் இடையிலான உறவை வெளிப்படுத்தும் விதமாக, இந்திய வம்சாவளியினர் கலந்து கொள்ளும் கூட்டத்திலும் பிரதமர் உரையாற்ற உள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.