19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் படிப் படியாக அத்தியாவசிய பொருட்களின் விலை உய்ரந்துகொண்டே வருகிறது. அதிலும் மிக முக்கியமாக பெட்ரோல், டீசல் விலையும் சமையல் எரிவாயு விலையும் கடுமையாக உயர்ந்துவருகிறது. இதனால் பொதுமக்கள் அனைவரும் அன்றாட வாழ்வை நடத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் சமையல் எரிவாயு சிலிண்டர் மற்றும் வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் ஆகியவற்றின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் நிர்ணயித்து வருகின்றன. இந்நிலையில், வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலையை எண்ணெய் நிறுவனங்கள் இன்று உயர்த்தியுள்ளன.
அதன்படி, 19 கிலோ எடையுள்ள ஒரு வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 102 ரூபாய் 50 காசுகள் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டிற்கான சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 2 ஆயிரத்து 253 ரூபாயில் இருந்து 2 ஆயிரத்து 355 ரூபாய் 50 காசுகளாக அதிகரித்துள்ளது. 5 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் விலை 655 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.







