பாமக எம்எல்ஏ மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம்-தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்

பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார். கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்லூரில்,…

பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ்
நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தினார்.

கடந்த 24 ஆம் தேதி மேட்டூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கருங்கல்லூரில், பாமகவை
சேர்ந்த மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் தலைமையில், பாமக நிர்வாகிகள்
கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம், சமூக நல்லிணக்கத்திற்கு எதிராகவும், சாதி பிரிவினையை தூண்டும் விதமாகவும் வன்முறையை தூண்டும் விதமாகவும் பேசியதாக விசிக சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில், பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது வன்கொடுமை தடுப்பு
சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விசிக தலைவர் திருமாவளவன்
வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.