சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரி ஊழல்- குடியரசு தலைவர் திரௌபதி முர்மு

சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரி ஊழல் என நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாடினார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின்…

சமூகநீதிக்கு மிகப்பெரிய எதிரி ஊழல் என நாடாளுமன்ற கூட்டுக்கூட்டத்தில் ஆற்றிய உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு சாடினார்.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று குடியரசு தலைவர் உரையுடன் தொடங்கியது. நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இன்று உரையாற்றினார்.

அப்போது பயமற்ற, தீர்க்கமாக முடிவெடுக்கும் அரசு இந்தியாவிற்கு அமைந்துள்ளதாக கூறி, பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார்.  ஜனநாயகத்திற்கும், சமூக நீதிக்கும் ஊழல் மிகப்பெரிய எதிரி என்பதில் மத்திய அரசு மிகத்தெளிவாக இருப்பதாக கூறிய திரௌபதி முர்மு, நேர்மையானவர்கள் மதிக்கப்படுவதை மத்திய அரசு உறுதி செய்து வருவதாகவும் தெரிவித்தார். ஊழலை முடிவுக்கு கொண்டுவருவதற்கான போராட்டத்தில் அரசு தொடர்ந்து ஈடுபட்டுக்கொண்டிருப்பதாகவும் நாடாளுமன்ற உரையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்மு தெரிவித்தார்.

தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாட்டை உலகம் உன்னிப்பாக கவனித்து வருவதாகக் கூறிய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு, உலகின் பல்வேறு அமைப்புகளில் தீவிரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் குரல் ஓங்கி ஒலித்துவருவதாகவும் குறிப்பிட்டார்.

சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய News7 Tamil Express App – ஐ தரவிறக்கம் செய்யுங்கள்.