பிரேமலதா விஜயகாந்த் பிறந்தநாளையொட்டி, தொண்டர்கள் அவரைச் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் அவர்களின்
54 வது பிறந்தநாளையொட்டி, சென்னை சாலிகிராமில் உள்ள அவருடைய இல்லத்தில் கேக்
வெட்டி இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
இதையும் படிக்க: காதலில் தோல்வி அடைந்தால் இன்சூரன்ஸா..? – எப்புட்ரா..??
பிறந்த நாளை முன்னிட்டு கோடைக்கால தண்ணீர் பந்தலை திறந்து வைத்துள்ளார். ஏழை எளிய மக்கள் 500 பேருக்கு அன்னதானம் வேட்டி, புடவைகள் உள்ளிட்டவைகள்
வழங்கப்பட்டன. மேலும், பிரேமலதா விஜயகாந்துக்கு தொண்டர்கள் நேரில் பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகிறார்கள். பிரேமலதா விஜயகாந்துடன் தொண்டர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சியை வெளிப்படுத்திக் கொண்டாடினர்.
-ம.பவித்ரா







