திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அருகே கர்ப்பிணியை டோலியில் 7 கிலோ மீட்டர் தூக்கி சென்று மருத்துவமனையில் சேர்த்தனர்.
நெக்னாமலை கிராமத்திற்கு சாலை வசதி இல்லாததால், இங்குள்ளவர்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். இந்நிலையில், இப்பகுதியை சேர்ந்த கர்ப்பிணி ராஜேஸ்வரிக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதைத்தொடர்ந்து, அவரை டோலி மூலம் தூக்கிச் சென்று சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில், தங்கள் பகுதிக்கு உடனடியாக சாலை வசதி செய்துதர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.







